நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 5:2
மார்க்கத்திற்கு முரணான எந்தக் காரியத்திற்கும் உதவி செய்யக் கூடாது! அது முஸ்லிமாக இருந்தாலும் சரி, மாற்று மதத்தினராக இருந்தாலும் சரி. மாற்று மதத்தினர்களிடம் கொடுக்க மறுத்தால் பிரச்சனை வரும் என்றால் அவர்களிடம் நமது நிலையை முதலில் தெளிவுபடுத்தவும். இது தவிர நல்ல காரியங்கள் செய்ய உதவி கேட்டால் நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம் என்று கூறவும். ரோடு போடுதல், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்தல், சாக்கடைகளைச் சரி செய்தல், ஏழை மாணவர்களுக்குப் படிப்புக்கு உதவுதல் போன்ற காரியங்களுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். மேலும் முஸ்லிம்களாக இருப்பவர்கள் தர்ஹா கட்ட நிதி உதவி கேட்டாலும் நாங்கள் தர மாட்டோம்; ஏனெனில் இது போன்ற காரியங்களுக்கு உதவுவது எங்கள் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக