பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதற்குத் தடை உள்ளது. (புலூகுல் மராம்) ஆனால் மார்க்கப் புத்தகங்களையும், தொப்பி, அத்தர் போன்றவற்றையும் பள்ளிவாசலில் விற்கின்றார்கள். இது கூடுமா?
கே. முஹம்மது ஜாஃபர், செங்கோட்டை
பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், "அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்கட்டும்'' என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 1242
இந்த ஹதீஸின் படி பள்ளிவாசலில் எந்தப் பொருளையும் விற்பதோ வாங்குவதோ கூடாது. மார்க்கப் புத்தகங்களானாலும் பள்ளிக்கு வெளியில் தான் விற்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக