கணவன், மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் உணர்ச்சியின் காரணமாக இச்சை நீர் வெளிப்பட்டால் அதற்காகக் குளிக்க வேண்டுமா? அல்லது உளூச் செய்தால் போதுமா?
உணர்ச்சியினால் ஏற்படும் இத்தகைய கசிவுக்கு அரபியில் மதீ என்று பெயர்.
மதீ வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டார். "அதற்காக உளூச் செய்வது தான் கடமை. (குளிக்க வேண்டிய அவசியமில்லை)'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 132, 178, 269
இந்த ஹதீஸின் படி மதீ என்ற இச்சை நீர் வெளிப்பட்டால் குளிக்கத் தேவையில்லை. உளூச் செய்வது போதுமானதாகும்.
1 கருத்துகள்:
இந்த இச்சை நீர் ஆடைகலில் பட்டு .விட்டால் நஜுஸா இல்லையா அந்த ஆடையுடன் தொலலாமா
கருத்துரையிடுக