கேள்வி: நான் உருது எழுத்தா ளரின் (பாகிஸ்தானியர் பெயர் பர்வேஸ்) அவர்களின் குர்ஆனின் விளக்கங்கள் படித்தேன். அதில் அவர் குர்ஆனின் வசனங்கள் வரும் பொழுது, "ஜின்' என்ற வசனத்தைக் குறிப்பிடும் போது காட்டுவாசிகள் என்று குறிப்பிடுகிறார்.
- முஷ்தாக் முஹம்மது, ஆம்பூர்.
பதில்: யாரும் சொல்லாத ஒன்றைக் கூறி மக்கள் கவனத்தைத் தம் பக்கம் ஈர்ப்பது சிலரது வழக்கம். சொல்கிற செய்தி சரியானதாக உள்ளதா? என்றெல்லாம் அவர்கள் ஆராயமாட்டார்கள். புதுமையாக எதையாவது சொல்லவேண்டும். அது தவறாக இருந்தாலும் சரியே! என்று இவர்கள் நடந்து கொள்வார்கள்.
நீங்கள் குறிப்பிடும் நபர் இது போன்ற ஒரு ஆசாமிதானே தவிர மார்க்கத்தை அறிந்தவராகத் தெரிய வில்லை.
ஜின் என்றொரு படைப்பு இருப் பதாக நம்புவதற்கு இவர்களது முற்றிய பகுத்தறிவு (?) இடம் தர வில்லை. அப்படி ஒரு தனி படைப்பு இல்லை என்று கூறினால் ஜின்களை நம்பத் தயங்குவோரை வென் றெடுக்கலாம் என்பது இவர்களின் நோக்கம்.
ஜின்களை நாம் பார்க்காததால் ஜின்கள் இல்லை என்று இப்போது கூறுவார்கள். ஷைத்தான்களையும் நாம் பார்க்கவில்லையே! அதுவும் கிடையாது என்பார்கள்! மலக்குகளை நாம் பார்த்தோமா? எனவே மலக்குகளும் இல்லை. அல்லாஹ் வையும் நாம் பார்க்கவில்லை. எனவே, அல்லாஹ்வும் இல்லை என்று கூறுவார்கள்.
"ஜின்' என்ற அத்தியாயத்தில் ஜின்கள் நபிகள் நாயகத்தைச் சந்தித்து நம்பிக்கை கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான். இதற்கு விளக்கம் கூறிய சில மேதாவிகள் ஜின்கள் என்றால் வெளியூர்வாசிகள் என்றனர். வேறு சிலர் காட்டுவாசிகள் என்றனர்.
ஜின்களைப் பற்றிப் பேசும் எல்லா வசனங்களிலும் இவர்கள் இப்படிப் பொருள் கொள்ள முடியாது. பல இடங்களில் வசமாக மாட்டிக் கொள்வார்கள். அப்போது இவர் களின் அறியாமையும் வெளிச்ச மாகும்.
இப்லீஸ் என்பவன் ஜின்னைச் சேர்ந்தவன் என்று 18:50 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் கூறுகிற கருத்தின்படி இப்லீஸ் வெளியூர்க்காரன் என்று பொருள்! அது ஒருவகையான படைப்பு என்று பொருளா? இப்லீஸ் காட்டுவாசி என்பது பொருளா?
சுலைமான் நபி அண்டை நாட்டு ராணியின் சிம்மாசனத்தை யார் கொண்டு வருவார் எனக் கேட்ட போது, உட்கார்ந்த இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன் நான் கொண்டு வருவேன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியதாக 27:39 வசனம் கூறுகிறது.
காட்டுவாசிகள் கண் மூடித்திறப் பதற்குள் அண்டை நாட்டில் உள்ள சிம்மாசனத்தை எடுத்து வருபவர்கள் என்பதை இது கூறுகிறதா? அல்லது வலிமை மிக்க - ஆற்றல் மிகுதியான ஒரு படைப்பு எனக் கூறுகிறதா?
வானில் சென்று ஒட்டுக் கேட்டதா கவும் அப்போது கேட்க முடியாமல் தீப்பந்தங்களால் விரட்டப்படு வதாகவும் ஜின்கள் கூறியதாக 72:9 வசனம் கூறுகிறது.
காட்டுவாசிகள் வானுலகத்தில் சென்று ஒட்டுக் கேட்பார்கள் என்பது தான் இதற்குப் பொருளா? தனியொரு படைப்பைப் பற்றிக் கூறுகிறதா?
ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கியதாக 6:100 கூறுகிறது.
காட்டுவாசிகளை நாட்டுவாசிகள் வணங்கினார்கள் என்பதுதான் இதன் பொருளா?
ஜான் என்னும் படைப்பை நெருப்பிலிருந்து படைத்ததாக 15:27, 55:15 வசனங்கள் கூறுகின்றன.
நாட்டுவாசிகள் மண்ணாலும் காட்டுவாசிகள் நெருப்பாலும் படைக்கப்பட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
ஜின் வேறு ஜான் வேறு என்றெல்லாம் கூற முடியாது. "இன்ஸ் ஜின்' (மனிதன் ஜின்) என்று பல இடங்களில் அல்லாஹ் இணைத்துக் கூறுவது போல் "இன்ஸ் ஜான்' என்றும் 55:39, 55:56, 55:74 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
நமது கண்களுக்குப் புலப்படாத வானவர்கள் என்ற படைப்பு இருப்பதுபோல் ஜின் என்ற படைப்பு உள்ளது. அதை நம்பியே ஆக வேண்டும். குர்ஆனின் ஒரு சில வசனங்களில் "ஜின்' என்பதற்கு காட்டுவாசி, வெளியூர்வாசி என்றெல் லாம் பொருள் கொள்ளும்போது மாட்டிக் கொள்வார்கள்.
ஜின் பற்றிக் கூறப்படும் எல்லா வசனங்களுக்கும் இப்படிப் பொருள் கொண்டால் அவர்களுக்கு குர்ஆன் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பது தெளிவாகும்.
ஜின்கள் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.
எனவே கண்ட கண்ட வெப் தளங்களைப் பார்வையிட்டு நேரத்தைப் பாழாக்கி விடவேண்டாம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக