மனைவி பேச்சைக் கேட்டு எனது மகன் நடக்கின்றாôன் இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920 ஹதீஸின் கருத்துக் இது எதிரானது இல்லையா?
தன் கணவன் சொல்படிதான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்கவேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றாôன் இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920 ஹதீஸின் கருத்துக் இது எதிரானது இல்லையா?
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.
யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். (அல்குர்ஆன் 37:17,18)
மாமியார் ஆகட்டும் அல்லது மருமகள் ஆகட்டும் யாராக இருந்தாலும் நல்கருத்தை யார் சொன்னாலும் ஏற்று நடக்கும் பண்பாடு நம்மிடம் வரவேண்டும். "தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம்' என்று மாமியார் நடக்கக்கூடாது. இதைப் போன்ற வயதில் மூத்த மாமனார்,மாமியாரை அவமதிக்கும் விதமாகவும் அவர்களின் நல்ல கருத்துக்களைக்கூட அவமதிக்கும் விதமாக மருமகள் நடக்கக்கூடாது. குறிப்பாக தாய் தந்தையிடமிருந்து மகனை பிரிக்கும் மகாபாதகமான காரியத்தை செய்யக்கூடாது. மேலும் பெற்றோர்களின் பேச்சை கேட்கவிடாமல் அவகளுக்கு எதிராகவும் நடக்கும்படி கணவனை மாற்றக்கூடாது. அவ்வாறு செய்தால் மிகப்பெரிய தீமை செய்ய தூண்டியவராக கருதப்படுவார்.
இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6675)
பெற்றோரை புண்படுத்துவம் காரியத்தை தம் கணவர் செய்து பெரும்பாவியாக மாற காரணமாக மனைவி இருக்கக்கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக்கூறி அவர்களை திருத்த முன்வரவேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையை செய்யக்கூடாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக