சூர் ஊதுவதற்கு என்று நியமிக்கப்பட்ட மலக்கு, முதல் சூர் ஊதியவுடன் அனைத்து உயிர்களையும் அழித்து விட்டு, நான் மட்டுமே நிலைத்திருப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இரண்டாவது சூர் ஊதியவுடன் இறந்த அனைவருக்கும் உயிர் கொடுப்பேன் என்றும் அல்லாஹ் கூறுகின்றான். முதல் சூர் ஊதியவுடன் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றால் இரண்டாவது சூர் யார் ஊதுவார்?
ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் இருப்போர் மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒருமுறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.
அல்குர்ஆன் 39:68
ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும். வானம் பிளந்து விடும். அன்றைய தினம் அது உறுதியற்றதாக இருக்கும். வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
அல்குர்ஆன் 69:13-17
முதல் ஸூர் ஊதப்பட்டவுடன் அனைவரும் இறக்க மாட்டார்கள். இதில் இறைவன் நாடியவர்கள் உயிருடன் இருப்பார்கள். அவர்கள் வானவர்கள் என்பதை மேற்கூறப்பட்ட வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. எனவே இரண்டாவது ஸூரை மலக்கே ஊதுவார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக