7:133 வசனத்தில் கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளையையும் இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். பேன் என்றால் பனூ இஸ்ராயீல் மக்களின் உரோமங்களில் அதிகமான பேன்கள் மூலம் சோதிக்கப்பட்டார்கள் என்று விளங்குகின்றது. ஆனால் வெட்டுக்கிளி, தவளை, இரத்தம் ஆகியவற்றால் எப்படி சோதிக்கப்பட்டார்கள்?
வஹிதா & ஃபாத்திமா, மஹ்மூதியா அரபிக் கல்லூரி, கோம்பை
! இதுகுறித்து ஹதீஸ்களில் எந்த விளக்கமும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை. பேன் மூலம் சோதனை என்றால் அதை எப்படி விளங்கிக் கொண்டீர்களோ அதே போல் மற்றதையும் விளங்கிக் கொள்ள வேண்டியது தான்.
வெட்டுக்கிளியின் மூலம் சோதனை என்றால் வெட்டுக்கிளி அதிகமாக அனுப்பி சோதிக்கப்பட்டார்கள் என்பது தான் அதன் கருத்து. ஒன்றிரண்டு வெட்டுக்கிளிகள் வருவதை சோதனை என்று கூற முடியாது. ஏனென்றால் சாதாரணமாக எல்லா நேரங்களிலும் அவை இருக்கக் கூடியவை தான். ஆனால் பார்க்கும் இடங்களில் எல்லாம் வெட்டுக்கிளியாக இருந்தால் எப்படி இருக்கும்? இதுபோன்று அந்த வசனத்தில் கூறப்படும் ஒவ்வொன்றையும் அதிகமாகக் கொடுத்து தொந்தரவுக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பது அதன் பொருளாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக